Tuesday, December 16, 2014

இயற்கை உணவு திட்டம்

இயற்கை உணவு திட்டம்
=============
காலை
-------
< 8 முதல்
9 மணிக்குள் >
முதல் நாள்
---------------
ஏதேனும் இரண்டு வாழைப்பழம்
ஒரு இளநீர
50 கிராம் வேர்க்கடலை.
2ம் நாள்
----------
அரைமுடி
தேங்காய்
100 கிராம்
அவல்
50 கிராம்
கருப்பட்டி.
3ம் நாள்
------------
கோதுமை புட்டு, கருப்பட்டி
இரண்டு வாழைப்பழம்
4ம் நாள்
-----------
கொய்யா 4 துண்டு
ஆப்பிள் 2 துண்டு
பப்பாளி 4 துண்டு
ஆரஞ்ச் 5 துண்டு
மாதுளை பாதியளவு
பாதம் பருப்பு 10 எண்ணம்.
5 ம் நாள்
------------
முளை கட்டிய கொண்டைக்
கடலை 100 கிராம்
பேரிச்சம் பழம்
50 கிராம்
வெள்ளரிக்காய் 1.
6ம் நாள்
-=--==----
அத்திப்பழம் 3
ஆரஞ்ச் பழம் 1
முந்திரிப்பருப்பு
10 எண்ணம்
வாழைப்பழம் 1.
6ம்நாள்
======
கேழ்வரகு கஞ்சி
நெல்லிக்காய், புதினா துவையல்
7ம் நாள்
----------
முளைகட்டிய சிறுபயறு
கால்கிலோ மரவள்ளிக்கிழங்கு உலர்திராட்சை 50 கிராம்
ஆகியவற்றை வாரத்தில் உள்ள ஏழு நாட்களுக்கும் ஏழு விதமான காலை உணவாக மாற்றி மாற்றி உண்ணலாம் . இந்த வரிசையை மாற்றியோ, கொஞ்சம் தேவைக்கு கூட்டியோ குறைத்தோ உண்ணலாம். இதுபோக கம்பு. சோளம், வரகு, பச்சரிசி போன்ற தேவையான தானியங்களை ஒன்றாக சேர்த்து இடித்து வைத்து தேங்காய், கருப்பட்டி போட்டு பிசைந்தோ காய்ச்சியோ குடிக்கலாம்.
மதியம்
<1 முதல் 2 மணிக்குள்>
கேரட் 50 கிராம்
வெள்ளரி 100 கிராம்
நெல்லிக்காய் 50.
பீட்ரூட் 50 கிராம்
பாகற்காய் 50 கிராம் சக்கரை வள்ளிக்கிழங்கு 50 கிராம்
உருளைக்
கிழங்கு 50 கிராம் ஊட்டி மிளகு 1
எலுமிச்சை 1
மிளகு தூள் சிறிது இந்துப்பூ சிறிது மேற்கண்ட காய்கறிகளில் நமக்கு பிடித்த காய்கறிகளில் தினமும் மூன்று விதமான காய்கறிகளை
சிறிய துண்டுகளாக வெட்டிப்
போட்டு அதனுடன் சிறுது எலுமிச்சை சாறு பிழிந்து, சிறிது மிளகு மற்றும் உப்பு கலந்து சாப்பிடலாம். தேவைப்பட்டால் ஏதேனும் முளைகட்டிய தானியம் சிறிதளவு அல்லது அரிசிச்சோறு கொஞ்சம். இல்லையென்றால் அவல் கொஞ்சம்
இதில் ஏதேனும் ஒன்றையும் காய்கறிகளுடன் இணைத்து சாப்பிடலாம்.!
மாலை
======
பட்டாணி, சிறுபயறு, கொண்டைக்கடலை, கொள்ளு போன்ற தானியங்கள் அல்லது பாதம், முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றுடன் வாழைத்தண்டு ஜூஸ், பப்பாளிக்காய் ஜூஸ், எலுமிச்சை, கருப்பட்டி, இந்துப்பூ கலந்த பானகம் போன்ற வகைகளில் ஏதேனும் ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம்.!
இரவு
------
<7 மணிமுதல்
8 மணிக்குள் >
மாம்பழம் 2 துண்டு சப்போட்டா 1
பைனாப்பிள் 2 துண்டு
சாத்துக்குடி, ஆப்பிள், மாதுளை,
நெல்லிக்காய், பாகற்காய் போன்ற ஏதேனும் ஒருஜூஸ் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்தலாம்.
இந்த குறிப்பில் உள்ள அனைத்து வகை பழம் மற்றும் தானியங்கள் தவிர அந்தந்த சீசனில் கிடைக்கும் தர்பூஸ், மாம்பழம், நொங்கு, நாவல், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாக காலையில் பழமும் தேங்காயும் மதியம் காய்கறிகளும் தானியங்களும் இரவில் பழங்களும், ஜூஸ் போன்ற வகைகளும் சாப்பிடுவது நல்லது. தினமும் ஒரே காய்கறி பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட உணவு முறைகளை சரியாக பின்பற்றி வந்தால் உடல் பருமன், நீரழிவு, சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மலச்சிக்கல், இரத்த அழுத்தம் போன்ற எந்த வியாதியாய் இருந்தாலும் மூன்றுநாளில் கட்டுப்பட்டு முப்பது நாளில் குணமடையும்.
[ மரபணு மாற்றம் செய்யப்பட்ட பழம், காய்கறிகளை தவிர்த்து
இயற்கையான முறையில் விளைவித்த வற்றை பயன்படுத்துவது சிறந்தது.! ]
நன்றாக முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளையும் அறுவை சிகிட்சை செய்தே ஆகவேண்டிய நிலையில் இருப்பவர்களையும் தவிர
மற்ற அனைவருக்கும் இந்த உணவு முறை மிக சிறந்த பயனை கொடுத்தே தீரும்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

உயர் இரத்த அழுத்தம், நரம்பு மண்டல பலவீனம், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை குணமாகும்.!

தினமும் சாந்தியாசனம், ஓம்கார தியானம் என்ற இரண்டு யோகா பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், நரம்பு மண்டல பலவீனம், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை குணமாகும்.! கூடவே தினமும் பத்துதுளசி இலைகளை பறித்து
இரவில் ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது கண்ணாடி டம்ளரில் 150 மில்லி சாதரண நீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.! சமையலுக்கு இந்துப்பை பயன்படுத்துவதோடு முடிந்தவரை இயற்கை வாழ்வியல்
வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும் மேற்குறித்த பிணிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.!
‪#‎இரத்தஅழுத்தம்‬ என்ற வியாதியை கூறியே ஆங்கில மருத்துவம் பலபேரை பரம்பரை வியாதியர்களாக உருவாக்கி வருகிறது.! விழித்துக் கொள்வோருக்கு வெற்றியுண்டு!
நலம் பெருகட்டும் …

Monday, December 8, 2014

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் 

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

Saturday, November 29, 2014

Nava Tirupathi 12 temples around Tirunelveli,Tamilnadu,India

Nava Tirupathi 12 temples around Tirunelveli


Saint poets, Azhvaars (there were 12 of them including Andaal) were ardent devotees of Lord Vishnu. These saint poets composed verses in Tamil and revitalized the religious spirit sparking off a renewal of devotional worship, referred to as the Bhakti movement. The Azhvaars visited temples and sung praises in the name of Vishnu. Such temples have come to be known as Divya Desams. The compilation of the verses (known as Paasurams) is the revered Naalayira Divya Prabandham(4000 verses). There are 108 Divya Desams in all, around 20 are in the Pandya region(Madurai-Tirunelveli belt). In each of these temples, Vishnu can be seen in one of the following forms- Reclining, Seated or Standing posture ( and even a walking posture!!!).

(also check www.prtraveller.blogspot.in - I moved to this in 2007)
In this Divya Desam series, we take you on a trip to cover 12 temples around Tirunelveli, including Nava Tirupathi (9 temples on either side of the river Tamaraibarani)


How to reach Tirunelveli

From Chennai, one can take Kanniyakumari Exp (430am arrival), Ananthapuri Exp(730am arrival) or Nellai Exp(835am arrival).

Where to Stay
The Railway Retiring room is a good and safe place to stay. Also, there are several budget and deluxe hotels near the railway station.


Not to Miss when in Tirunelveli

Ø “Iruttu Kadai Halwa”(Dark Shop Halwa) opposite Nellaiappar temple is the best Halwa you can taste in Tamil Nadu
Ø The famous Courtallam waterfalls is just over an hour’s drive from Tirunelveli
Ø Sea Shore Temple at Tiruchendur- 60 kms East of Tirunelveli


Nava Tirupathi Temples

These are 9 Vishnu temples on either side of Tamaraibarani river. These temples hold a special place in the 108 Divya Desams. While Irattai Tirupathi features as two temples in the Nava Tirupathi list, it is counted as one divya desam only. Nammazhvar, the only Azhvaar to have sung at the Nava Tirupathi temples, refers to certain temples in great detail, while some get only a passing mention. With extensive renovation work being funded by the TVS Group, these temples now have a mark of freshness about them. At each of these nine temples, one can find a display board with temple timings and route map.













One can start the Nava Tirupathi trip from SriVaikuntam and end with Azhvaar Tirunagari. From SriVaikuntam, one can take an auto/taxi to go around the other 8 temples. This will cost around Rs. 250-300 and will take about 5 hours.One can also begin the Nava Tirupathi journey at Azhvaar Tirunagari and end with SriVaikuntam.


1. Sri Vaikuntam

SriVaikuntam is about 30 kms from Tirunelveli on the Tiruchendur road. Buses ply every 10 minutes on this route from Tirunelveli’s new bus stand. Also, there are daily local trains on the Tirunelveli-Tiruchendur route, though less frequent. One can see the towering structure of Vaikuntanathan temple as one enters the Tamaraibarani bridge, off Tiruchendur highway. The story goes that the Lord, disguised as the thief, presented himself before the King to save the thief. Hence, the Lord here is also known as ‘KallarPiran’. In Vishnu temples, Adisesh, the Serpent God unfurls his hood over Vishnu in a reclining posture. A unique feature of the Lord here is that Adisesh has his hood above the Lord in standing posture, one of its kind in the 108 Divya Desams.

Another feature of the temple is that the Sun’s rays falls directly on Lord Vaikuntanathan on two days(April-May and October-November period) every year. It is believed that this temple was used as a fort in the fight between the legendary freedom fighter Veerapandiya Kattabomman and the British in the 1800s. Surprisingly though, Nammazhvar only makes a passing mention of this temple in his Paasurams.



Temple timing: 7am-12noon and 5pm-8pm
Contact: A.K. Vaikunta Natha Bhattar @ 98656 28681


2. ThiruvaragunaMangai
This temple is about 2 kms East of SriVaikuntam and is known to many as the Vishnu temple at Natham. True to his name, Lord Vijayaasanar is seen to be sitting majestically like a victorious king on the throne. It is believed that a visit to this temple will help one attain moksha. This place is said to be a ‘Chandran’ Kshetram.

Temple timing: 8am-12noon and 1pm-6pm
Contact: Narasimha Bhattar @ 04630 256476


3. Thirupulinkudi

1 km from Natham is the Lord KaasinaVenthar temple at Thirupulingkudi. The East facing Lord is seen in a reclining posture with a lotus stalk from his navel terminating in a flower on Brahma’s image on the wall of the sanctum. The story goes that Vishnu, along with Goddess Sridevi, came down to visit this place. Angered at being ignored for the trip, Goddess Bhoodevi hid herself in the netherworld. After Vishnu pacified her, it is believed that the two Goddesses came back together and gave darshan here with the Lord. An interesting feature of the temple is that Vishnu’s feet can be viewed through a small window in the passage.
Temple timing: 8am-12noon and 1pm-6pm
Contact: Gopalan Bhattar@ 04630 256476


4 &5. Irettai Tirupathi


These are two temples within a 100 yards of each other in the middle of a jungle and are counted as one for the purpose of the 108 Divya Desams. One has to cross a small canal to reach this temple. The road leading up to this temple is very narrow. The first of the two temples has Lord Devapiran in a standing posture facing East.
Sage Suprabhar who performed a yagna at this place relieved a man and a woman from Kubera’s curse, which had turned them into a measuring scale (Tulai) and a bow (Villi). Hence this place is called Tulai Villi Mangalam. At the second temple one finds Lord Aravindalochanar in a seated posture facing East.
Legend has it that Lord Vishnu was impressed with Sage Suprabhar’s daily Lotus pooja and gave darshan to the sage on the Northern banks of Tamaraibarani. Hence, it is believed that one who does special ‘Lotus Flower’ pooja at this temple will be relieved of all sins.
Temple timing: 8.30am-1pm and 230pm-530pm
Contact: Seshamani Bhattar@04630 256372


















6. ThiruKuzhandhai

The Maayakoothan temple at Thirukuzhandhai is about 10 kms East of SriVaikuntam and near Eral. This place is now known as Perungulam. Legend has it that Vishnu went on his Garuda Vaahan to rescue Goddess Lakshmi from an Asura. Hence, one finds Garuda as the Utsav deity here. In the battle that ensued, Vishnu is said to have performed his victory dance standing on Asura’s body and hence the name MaayaKoothan.
Temple timing: 730am-1230pm and 430pm-730pm
Contact: MaayaKoothar Bhattar @ 04630 256372


7. ThenThiruperai

















Back across the bridge and on to the South bank of Tamaraibarani, one finds the big Nigaril Mugilvannan temple at ThenThiruperai where the Lord is seen in a seated posture facing East.
Legend has it that Goddess Bhoodevi found two fish shaped ear rings while performing a penance, on the banks of Tamaraibarani, to relieve herself of Sage Durvasa’s curse and offered it to the Lord. The Lord who wore this came to be known as ‘Makara Nedun Kuzhaikathan’.

Another story is that Varuna (the Rain God) performed a penance here to be relieved of his curse. As a mark of this, it is believed that Varuna, visits this temple, every year, on the full moon day in the month of Panguni and worships Vishnu.
Temple timing: 730am-12noon and 5pm-830pm
Contact:Anantha Padmanabha Bhattar @ 04639 273902


8. ThiruKolur – The birth place of MaduraKaviAzhvaar
















3 kms South West of Thiruperai is the Vaitha Maa Nidhi temple at Thiru Kolur, where the Lord is in a reclining posture facing East.
This is the birth place of MaduraKaviAzhvaar, the ardent devotee of Nammazhvaar. Legend has it that Kubera attained salvation from Goddess Parvati’s curse at this place and it was here that his Nava Nidhis were restored.
It is said that a visit to this temple will help one recover lost wealth. The Lord here is said to help his devotees in distress.



Temple timing: 730am-12noon and 1pm-8pm
Contact: Srinivasa Bhattar @ 04630 291634


9. Azhvaar Tirunagari-The birth place of Nammazhvaar

















The last halt at the Nava Tirupathi temples is the AadiNaathan temple at Azhvaar Tirunagari (Kurugur). It is said that AadiNathan emerged on his own from the earth, though this does not figure among the only 8 temples where the Lord is believed to have emerged on his own.

Granting the prayers of a childless couple, Lord Nambi of Thirukkurungkudi is believed to have been born here as Nammazhvaar. When born, Nammazhvaar is said to have not opened his eyes or cried and he was taken to the tamarind tree within the temple.

Here, Nammazhvaar resided for 16 years till ThiruKolur’s Madurakavi (who was to later become his 
disciple) came and posed some interesting questions about life and that is when Nammazhvaar is said to have spoken for the first time.

So impressed was MaduraKavi (Azhvaar) with Nammazhvaar’s answers, that he said ‘ I do not need God, Nammazhvaar is enough’. Though Nammazhvaar died young, while in his 30s, his contribution to the Bhakti Movement is immense as can be seen from the fact that he sung praises of the Lord in one-third of the 108 Divya Desams. When Vaishnavites say Azhvaar, it means they are referring to Nammazhvaar, such is the reverence for him. There is a separate sannidhi for Nammazhvaar at this temple. He is the only one to have sung praise of Vishnu at the Nava Tirupathi temples. The centuries old tamarind tree at the temple neither bears fruit nor closes its leaves at dusk.

An important festival at this temple is the Vaikasi Utsav, when the deities from all the Nava Tirupathi temples congregate here at Azhvaar Tirunagari to listen to the Paasurams with Nammazhvaar seated on the Hamsa Vaahan. During Margazhi, one is a witness to ‘Thiru Mudi’ Sevai, the only one of its kind in Divya Desams. This is one of the three Divya Desams in TN where Araiyar Sevai, the visual song and dance enactment of the ‘Paasurams is still being performed. There is a stone nadaswaram at this temple, which is played out on special occasions. Most of the inscriptions here date back almost a 1000 years.


Temple timing: 7am-12noon and 5pm-8pm
Contact: Appu Sadagopachari 04639 273984


10. Vaanamaamalai(Nanguneri)















Situated about 30kms from Tirunelveli off the Nagercoil NH7 is the Lord Vaanamaalai Thothadri Nathar temple at Nanguneri. Out of the 108 Divya Desams, there are only 8 that have Lord’s Idol emerging on its own from the earth and this is one of the eight.

A speciality of this Divya Desam is that an oil pooja is performed daily for the main deity and this oil is deposited in the 25 feet open well within the temple. The oil is said to have medicinal values and is believed to cure both internal and external illness including ulcer and skin diseases.

The 600 years old Vaanamaamalai mutt(Jeers) are the hereditary trustees of the temple. Most of the main festivals at this temple are celebrated in a unique way, not found in any other Divya Desams. 

The main deity (Lord Deivanayakan) and Goddess are brought to the Mutt and the entire pooja festivities of the divine couple is performed at the Mutt.

Temple timing: 8am-12noon and 5pm-9pm
Contact: Nambi Srinivasa Bhattar 04365 250119
To reach Nanguneri : 45 minute bus trip from Tirunelveli New Bus stand. Buses every 5 minutes. Kanniyakumari Exp and Ananthapuri Express from Chennai stop at Nanguneri station.


11. Thirukkurungkudi Nambi















Known as the ‘South Badri’, Azhagiya Nambi temple at Thirukkurungkudi is about 15 kms from Nanguneri. While the Lord lectures Ramanuja at (North) Badri, it is said that, here at Thirukkurungkudi, the Lord took the role of a disciple and obtained Vaishnava Initiation from Ramanuja and hence the Lord here is also called Vaishnava Nambi.

Chola, Pandya and Naayak Kings are said to have played a significant role in the construction of this temple. Culverts show that this temple in its current form and structure is at least 700 years old.

Under half a km from the main temple is the Thirupaarkadal Nambi temple and about 8 kms from here on the Western Ghats is the Thirumalai Nambi temple, where it is believed that Lord Hanuman took the leap to Lanka from here. Also, it is said that Lord Rama made his plans for the construction of the bridge to Lanka from here and then went over to Thirupallani. The Lord here has 39 different names including Kurungkudi Nambi, Vaishnava Nambi, Tirupparkadal Nambi and Malai Mel Nambi. Lord Nambi himself is believed to have been born as Nammazhvaar at Azhvaar Thirunagari.

The famed Araiyar Sevai originated from Thirukkurungkudi. Legend has it that the Lord used to listen to Araiyar’s Abhinayam hiding behind a wall in Bashyam Street(South Mada St). In recognition of this significant event, even today, one can see the name of this street in Tirunelveli’s Gazette. It is believed that ‘Vaikuntam’(the ultimate destination for Vaishnavites) is in ‘calling distance’ from this place. Thirumangai Azhvaar composed the last of his Paasurams here at this temple and is believed to have attained moksham from here.

Thirukkurungkudi is said to be the home to the Vaishnava tradition of ‘Kaisika Ekadesi’. On this day, the employees of the temple perform a Kaisika Natakam(drama)-worship of the Lord through dance, music and drama. This special event at the Thirukkurungudi temple dates back several hundred years. This year the Kaisika Natakam will take place at 10pm on 1st December.

Timings: 8am-12noon and 5pm-9pm
Contact: Murali Bhattar@ 94432 05739
How to reach Kurungkudi: Frequent buses from Valliyoor. One can also take a bus from Nanguneri.


12. Srivilliputhur

















Srivilliputhur, the birthplace of Andal, is considered to be among the holiest of the 108 Divya Desams because it is the birthplace of not one but two Azhvaars and a father-daughter one at that- Periazhvaar and Andal.. Legend has it that this town was built by two hunters Villi and Puttan and hence the name Villiputhur. The temple dates back to 1st Century AD.

The 196 ft high temple tower is 2nd only to Srirangam’s Rajagopuram. The temple tower is the one that is featured on the TN Government logo. The 9 tier temple chariot is said to be the biggest in Tamil Nadu. One finds Lord Garuda, the charioteer of Lord Vishnu, along side the main deities.

In all other temples, you would find Garuda standing opposite the main deity. It is believed that Garuda, brought Lord Ranganathan of Srirangam, to Srivilliputhur, faster than expected and hence he was accorded the special status here. A unique tradition followed to this day at this temple, not seen in any other Divya Desam, is that Lord Vadapatrasayi adorns the garland worn the previous evening by Andal (the Goddess).

Andal’s Thiruppavai (30 verses in praise of Lord) is one of the most beautifully composed songs among the 4000 Paasurams. It is believed that singing these 30 verses will bring peace and prosperity as well as God’s grace. Periazhvaar composed a total of 473 Paasurams, the first 12 is the famous Thirupallandu. It is said that Periazhvaar sang this first, in a debate on how best to serve the Lord, in front of the Pandya King in Madurai using Elephant’s bells as the beats for the song. A big attraction at the temple is the Araiyar Sevai, the song and dance enactment of the Paasurams. Vaikunta Ekadesi festival(Dec-Jan) attracts devotees from all over.

Temple timing: 630am-12noon and 4pm-9pm
Contact: Bala Mukunda Araiyar @ 94438 67345
Frequent buses from Tirunelveli via Sankaran Koil-Rajapalayam (2 hours). There is a direct train thrice a week (Podhigai Express) from Chennai